செவ்வாய், 21 ஜூன், 2011

நிலத்தியல் மாந்தர்

நிலத்தியல் மாந்தர்
------------------------------
குறிஞ்சி நிலத்தில்
கூடி இருந்து
முல்லை நிலத்தில்
பொறுத்து இருந்து
மருத நிலத்தில்
ஊடி இருந்து
நெய்தல் நிலத்தில்
வருந்தி இருந்து
பாலை நிலத்தில்
பிரிந்து இருந்து
எல்லா நிலத்திலும்
ஏழையாய் இருப்பர்
நிலம் பெயராத
நிலத்தியல்   மாந்தர்
----------------------------------நாகேந்திர பாரதிகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக