காசிப் பாட்டி
------------------------
எம்பது வயசாச்சு
எச்சுமிப் பாட்டிக்கு
இரும்பு உடம்பு
இளகின மனசு
காசிக்குப் போயி
கருமம் கழிக்கணுமாம்
சொல்லிக்கிட்டே இருந்தவ
சொல்லாம போயிட்டா
தேட வேண்டாமாம்
திரும்ப மாட்டாளாம்
கண்ணீரைக் கொடுத்துட்டு
கங்கைக்குப் போயிட்டா
காணாமப் போயிட்ட
காசிப்பாட்டி ஆயிட்டா
--------------------------------------------நாகேந்திர பாரதி
கவிதை கதை எழுதுகிறது.....
பதிலளிநீக்குஇப்படிதான் லெட்சுமி பாட்டி காசி பாட்டி அனாங்களா?
ஏங்க உங்க தலைப்பை “நாகேந்திர பாரதி” ன்னு கம்பீரமா மாத்தலாமுள்ள?
பதிலளிநீக்கு