வியாழன், 16 டிசம்பர், 2010

அபிநய தேவி

அபிநய தேவி
--------------------------
'இதய வீணை தூங்கும் போது'
எரிச்சல் காட்டும் இதழ்கள்
'காவேரி ஓரம் கதை' க்கு
கலங்கி வாடும் கண்கள்
'காதல் சிறகை காற்றினில் விரிக்கும்'
கருப்பு மேகக் கூந்தல்
'தனிமையிலே இனிமை காண'
முடியாத முக பாவம்
அந்தக் கால அபிநய தேவிக்கு
இந்தக் காலத்திலும் ரசிகர்கள்
---------------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. \\அந்தக் கால அபிநய தேவிக்கு
    இந்தக் காலத்திலும் ரசிகர்கள்\\
    nanum thaan.

    பதிலளிநீக்கு