ஞாயிறு, 26 டிசம்பர், 2010

ஒத்தையடிப் பாதை

ஒத்தையடிப் பாதை
--------------------------------------
பனை மரங்களைப் பார்த்தபடி
அய்யனாரைக் கும்பிட்டபடி
ஓணான்களை விரட்டியபடி
வாய்க்கால்களைத் தாண்டியபடி
மைனாக்களைக் கேட்டபடி
ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து
ஒத்தையடிப் பாதை வழி
ஒரு மணி நேரத்தில் ஊர்
இப்போதெல்லாம் பஸ்ஸில் ஏறி
கால் மணி நேரத்தில் ஊர்
கனவில் மட்டும் ஒத்தையடிப் பாதை
----------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. "கிராமத்தை"க் குப்பையென்றான் சோ"மாரி" ஒத்தைய்டிப் பாதையும் ஒழுங்கான வரப்புகளும் விளைகின்ற வ்யல்களுந்தான் உஞ்ச விருத்தி செய்யும் உனக்குச் சோற்றுருண்டை போடுதடா சோமாரி என்று சொல்க.

    பதிலளிநீக்கு