வெள்ளி, 5 நவம்பர், 2010

தீப வலி

தீப வலி
-----------------
பட்டாசு வெடிக்கும் போதும்
மத்தாப்பு தெறிக்கும் போதும்
தீக்குச்சி உரசும் போதும்
நெருப்பு பறக்கும் போதும்
காகிதம் விரித்து வைத்து
மருந்தை உருட்டி வைத்து
உருவம் பலவும் செய்து
உலர்த்தி உறையும் போட்ட
விரல்கள் இடுக்கில் வந்த
வீக்கம் வலியாய்க் குத்தும்
----------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. அருமை.... சிவகாசி காரர்கள் படித்தால் மேலும் மகிழ்வார்கள்... வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு