புதன், 7 ஜூலை, 2010

கரைந்து போன வருடங்கள்

கரைந்து போன வருடங்கள்
--------------------------------------------
பத்தடிக்கு பத்தடி அறையில்
பத்துப் பேர்  படுத்திருந்த விடுதி
புதனும் சனியும் கறிச் சோறுக்கு  
புரட்டி எடுத்த பசி வயிறு
ஞாயிறு மாலை தியேட்டருக்கு
நடந்து போன ஞாபகங்கள்
பரீட்சை விடுப்பில் மட்டுமே
பாடப் புத்தகத்துக்கு  பயந்தது
கால ஓட்டத்தில் வேகமாய்
கரைந்து போன வருடங்கள்
-------------------------------------------------------நாகேந்திர பாரதி

2 கருத்துகள்:

 1. ”கால ஓட்டத்தில் வேகமாய்
  கரைந்து போன வருடங்கள்”
  நல்ல வார்த்தைகள் நல்ல கவிதைக்குள் அடியெடுத்துவைக்கும் நல்ல ஆரம்பம்,உங்களது
  கவிதைப்பணி தொடரட்டும்
  ”வாழ்த்துக்கள்”
  அன்புடன் தமிழ்பாலா

  பதிலளிநீக்கு