வியாழன், 24 ஜூன், 2010

கண்மாய்க்கரைக் கதை

கண்மாய்க்கரைக்  கதை
--------------------------------------
நடுவிலே தண்ணீர் வைத்து
நாலு புறம் காத்து நிற்கும் 
சகதியாய் வழுக்கி விட்டு
சமத்தாக சிரித்து வைக்கும்
தண்ணீரும் வற்றிப் போனால்
தனியாக வாடி நிற்கும்
கல்லாய் மண்ணாய் மாறி
காலிலே குத்தி வைக்கும்
இருந்தால்தான் சிரிப்பெல்லாம்
இல்லையென்றால் வெறுப்புத்தான்
------------------------------------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. கண்மாய்... நினைவில் நிழலாடுகிறது.
    கவிதை கதைபிடிப்போடு இருக்கு பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு