புதன், 31 மார்ச், 2010

தின்பண்ட காலம்

தின்பண்ட காலம்
----------------------------
நுங்கும் கிழங்கும்
மொங்கிய காலம்
முறுக்கும் சீடையும்
நொறுக்கிய காலம்
பிஸ்கட்,  வடையைப்
பிய்த்த  காலம்
ஐஸ்கிரீம், சாக்லேட்
உருகிய காலம்
மருந்து,  மாத்திரை
ஆரம்ப காலம்
---------------------------------------நாகேந்திர பாரதி

1 கருத்து:

  1. ஆகா​கோடையின் நீட்சியைச் சுருக்கும் பால்ய நினைவுகள்.

    வறண்டு போயிருக்கிற நினைவோடையில் 'டயர்வண்டி' ஓட்டிவிடுகிற கவிதை!

    பதிலளிநீக்கு