வியாழன், 21 மே, 2009

கூடு விட்டுக் கூடு

கூடு விட்டுக் கூடு
----------------------
வாடகை வீடு மாறுவது கூடு விட்டுக் கூடு
பரணைக் காலி செய்ய பெருச்சாளி முறைக்கும்
பழைய தொலைந்த புத்தகம் கிழிந்த முகம் காட்டும்
எத்தனை பல்பு முதலில் இருந்ததென்ற எண்ணிக்கை
அடித்த ஆணிகளை எடுப்பதா விடுப்பதா
ரேஷன் கார்டுக்கு சரண்டர் சர்டிபிகேட்
கட்டவேண்டிய பில்கள் பாக்கி உள்ளதா
கொடுத்த அட்வான்ஸ் உடனே கிடைக்குமா
சொல்ல வேண்டியது யார் யாருக்கு
புது வீட்டு ஓனருக்கு புன்னகை முகம்
-------------------------- நாகேந்திர பாரதி
---------------------------------------------------

9 கருத்துகள்:

 1. உங்களது சில கவிதைகள் படித்தேன்.. கொஞ்சம் வித்தியாசமாகவே இருக்கின்றன. அழகான படிமம். தொடருங்கள்..

  உங்களது தளத்திலிருந்து வேர்ட் வெரிஃபிகேஷன் எடுத்துவிடுங்க..

  பதிலளிநீக்கு
 2. நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. டைம்லி கவிதை.

  இந்த நிமிஷம் இதே நிலையில் இருக்கேன்.

  இடப்பெயர்ச்சி வந்துருக்கு(-:

  பதிலளிநீக்கு
 4. காமெண்ட் மாடரேஷன் போட்டுக்குங்க.

  நல்லது.

  வேர்டு வெரிஃபிகேஷன் ஒரு சல்யம்;-)

  பதிலளிநீக்கு
 5. கவிதை வித்தியாசமா நல்லா இருக்கு
  தொடர்ந்து எழுதுங்கள்
  வாழ்த்துக்கள் நாகேந்திர பாரதி ...

  பதிலளிநீக்கு
 6. நல்லா இருக்கு வாழ்த்துக்கள் பாரதி..நிறையா எழுதுங்க..

  பதிலளிநீக்கு
 7. நல்ல முயற்சி. வலையுலகில் காப்பி-பேஸ்ட் பின்னூடமிடுவதை பலர் விரும்புவதில்லை. அதிருப்திகள் உருவாவதற்கு காரணமாகாதீர்கள், எனினும் பிற தலங்களில் பின்னூட்டமிட்டு வாசகராக இருந்துகொண்டேயிருப்பதே போதுமானது. வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 8. Thanks Venki; point noted ; please keep visiting my blog; I am regularly updating with new poems. Regards - Nagendra Bharathi

  பதிலளிநீக்கு
 9. Thanks Adhavan, Ravi, Gopal, Puthiyavan, Vinoth. Please keep visiting my blog and offer your comments as I am regularly updating with my poems. Regards
  Nagendra Bharathi

  பதிலளிநீக்கு