கிராம நாட்கள்
-----------------
வாசல் திண்ணை
வெயில் நேரத் தூக்கத்திற்கும்
இரவு நேரத்து புரணிக்கும்
ஏற்ற மேடை
ஓரமாய் நிற்கும்
வேப்ப மரத்தடியில்
எப்போதும் ஒரு நாய்
ஏக்கத்தோடு பார்க்கும்
கூரையும் ஓடுமான வீட்டுக்குள்
நுழைந்து திரும்பினால்
சட்டி பானைகளுக்குநடுவில்
சாணி மெழுகிய தரை
ஓரமாய் நிமிர்த்து வைத்திருக்கும்
ஈசிச் சேரை இழுத்துப் போட்டு
கட்டையைச் சொருகிச் சாய்ந்தால்
காலிடுக்கில் இடிக்கும்
சுவரைப் பிளந்த
களிமண் சன்னலின் வெளியே
வயலும் பனை மரமும்
ஓவியமாய்த் தெரியும்
காலை நேர பழைய சோறும்
மாலை நேர மீன் குழம்பும்
இடையே வயக்காட்டு வேலையுமாய்
கிராமம் ஒரு சுவர்க்கம்
--------------------------------------நாகேந்திர பாரதி
----------------------------------------------------------------------------
//சட்டி பானைகளுக்குநடுவில்
பதிலளிநீக்குசாணி மெழுகிய தரை//
சாணி மெழுகிய தரையில் தவழ்ந்த அனுபவங்கள் எனக்குமுண்டு