புதன், 18 டிசம்பர், 2024

நம்பிக்கை - கவிதை

 நம்பிக்கை - கவிதை 

————


கோயில் கிடையாது

கோபுரம் கிடையாது


உண்டியல் கிடையாது

ஊரும் கிடையாது


ஒதுக்குப் புறத்திலே

ஒத்தை வேப்பமரம்


குத்திவச்ச வேல் கம்பு

குதிரையிலே முனுசாமி


கும்பிட்டுப் போனாலே

கூடுறதாம் நெனைச்சதெல்லாம்


பத்துத் தலைமுறையாய்ப்

பத்து ஊரு சனத்திற்கும்


———நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நீ வந்த போது - கவிதை

 நீ வந்த போது - கவிதை  ------------------------ மேகப் பொதியில் ஒன்று மெத்தென மோதியது போல் தூறல் மழைச் சாரல் தொட்டுத் தடவியது போல் தெக்குத் த...