அலைகளை மறந்த கடல் - கவிதை
----------------------------------
ஆடிக் கொண்டு அலைந்த
அந்தக் காலம்
எதிர் காலம் பற்றியே
எண்ணாக் காலம்
கடலின் அலையாய்
நுரைத்த காலம்
படித்து முடித்து
வேலைக்கு அலைகையில்
அலையும் ஓய்ந்தது
கடலும் காய்ந்தது
அலைகள் மறந்த கடலாய்
ஆகிப் போனது
-------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக