தித்திக்கும் திருமணங்கள் - கவிதை
———-
ஒத்திருக்கும் மனங்களென்றால்
தித்திக்கும் திருமணங்கள்
எங்கேயோ பிறந்தாலும்
எங்கேயோ வளர்ந்தாலும்
இனிமேலே எப்போதும்
இங்கேதான் இருவரும்தான்
என்றாகும் மணத்திற்கு
மனம்தானே அச்சாணி
அச்சாணி மாட்டாமல்
வண்டியிலே ஏற்றுகின்ற
அழகுக்கும் பணத்திற்கும்
வாழ்க்கை வண்டி ஓடாது
——-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக