வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

வழித்துணை- கவிதை

 வழித்துணை- கவிதை 

——————

பக்கத்து மரத்தினிடம்

பாதி நீர் கேட்பதில்லை

உள்ளிருக்கும் வேர்களே

உறிஞ்சுதற்குப் போதும்


சேர்ந்திருக்கும் பறவையிடம்

சிறகுகளைக் கேட்பதில்லை

ஒட்டியுள்ள சிறகுகளே

உயரப் பறக்க வைக்கும்


மரத்திற்குள் பறவைக்குள்

மறைந்துள்ள நம்பிக்கை

மனிதர்க்கு மட்டுமேனோ

மறந்து போய் மறைந்தது


உதவிக்குத் துணை கேட்டு

ஓரிடமும் அலையாமல்

தன்கையே தனக்குதவும்

தைரியமே இருந்திட்டால்


வழித்துணையே தேவையில்லை

வாழ்க்கையே நம்பிக்கை


————நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உஷா தீபன் சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 உஷா தீபன்  சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------  நன்றி அழகிய  சங்கர். 'எதி...