குடும்பத் தனம் - கவிதை
------------------------------
அந்த ஐந்து பேர்
அவனைத் துரத்தியபோது
அவன் கால் தடுமாறி
விழுந்த போது
நாம் ஒதுங்கி நின்று
பார்த்த போது
அரிவாள் வீச்சு
அவன் மேல் விழுந்த போது
ரத்தக் குழம்பு
தெறித்த போது
அவன் உடல்
துடித்த போது
அந்தக் கொலை
முடிந்த போது
ஐந்து பேரும்
ஓடிய போது
நமக்குள் இருந்தது
என்ன அது
கோழைத் தனமா
குடும்பத் தனமா
-------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
பயம்...
பதிலளிநீக்கு