வேரின்றி விழுதில்லை - கவிதை
---------------------------------------------
துணையாகத் தோள் கொடுக்கும்
விழுதுகளைப் போற்றும் நேரம்
வேரின்றி விழுதில்லை
என்ற உண்மை மறக்க வேண்டாம்
ஆரம்ப விதையொன்றில்
ஆரம்பித்த ஆணிவேரே
அச்சாணி தேருக்கென்ற
அருமையினை ஒதுக்க வேண்டாம்
விழுதுகளாய்க் கிளை விட்டு
வேரூன்றி வருமட்டும்
பழுதின்றிப் பாதுகாத்த
பண்பும் அன்பும் எங்கிருந்து
வேருக்குத் தான் தெரியும்
வியர்வையும் கண்ணீரும்
தான் ஊன்றி விட்டதனால்
தலைக்கனத்தில் அலையாமல்
வேருக்கு நீரூற்றல்
மரத்திற்கு மரியாதை
------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
நம் கடமை...
பதிலளிநீக்கு