காட்டு வழி - கவிதை
----------------------------
இறுக்கப் பின்னிய மரங்களுக்கிடையே
எட்டிப் பார்க்கும் சூரிய மஞ்சள்
முரட்டுக் கிளைகள் தடித்த வேர்கள்
முண்டு முண்டாய் முளைத்த பாதை
தொங்கித் தாவும் குரங்குக் கூட்டம்
தலையைக் கொஞ்சம் தடவிப் போகும்
தடுக்கி விழுந்து நடக்கும் நடையில்
காட்டுக் குழந்தை ஆகும் பருவம்
கிடைத்த இடத்தில் படுத்துப் போகும்
நீள அகல நீரின் சளசள
அடிக்கும் படபட இறக்கைச் சத்தம்
கிக்கிக் குக்கூ கலவைக் கூவல்
அத்தனை நிறமும் பூக்களின் மேலே
திகட்டிப் போகும் தேனின் வாசம்
தானாய் வளர்ந்த காட்டு வழியில்
இயற்கைத் தாயின் இளமைச் செழிப்பு
இருட்டுக் கவ்வும் கறுப்புக் கூடாய்
எங்கோ கேட்கும் உறுமல் சப்தம்
இருந்து போகத் தவிக்கும் மனது
ஏனோ கால்கள் விலகி விரையும்
-------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
இனிமை...
பதிலளிநீக்கு