மொட்டைக் கோபுரம் - கவிதை
---------------------------------------
ஏழுநிலைக் கோபுரமாய்
எழுந்திருக்க வேண்டியது
முடிக்காமல் விட்டதனால்
மொட்டையாக நிற்கிறது
பகல் கூட இரவாக
படியெல்லாம் இருட்டாக
வவ்வால் கூட்டத்தின்
வழுக்கி விடும் புழுக்கையாக
திருட்டுப் பீடித் துண்டாக
தெறித்து விழும் சுவராக
பக்கத்துக் கோபுரத்தில்
பாட்டொலிகள் கேட்கிறது
அங்கிருக்கும் வாசலிலே
ஆட்கூட்டம் சேர்கிறது
தீபங்கள் எரிகிறது
திருவிழாக்கள் தெரிகிறது
புறப்பாடு போகிறது
பூசையெல்லாம் நடக்கிறது
இங்கிருக்கும் சிற்பிகளின்
ஆவிகளோ அழுகிறது
------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்கு