நேற்று வரை மாற்றமில்லை - கவிதை
---------------------------------------------------
நேற்று வரை மாற்றமில்லை
நெஞ்சில் ஒரு தோற்றமில்லை
இன்றவளைப் பார்த்ததனால்
ஏக்கத்தில் துடித்ததனால்
எவ்வளவோ மாற்றங்கள்
எனக்குள்ளே என்ன செய்ய
'எப்போது இனிமேலே'
என்றபடி தவித்தபடி
ராத்திரியில் தூக்கமில்லை
சாப்பாட்டில் நாட்டமில்லை
சேர்த்து வைக்கும் செயல் முறையை
இறைவனிடம் ஒப்படைத்து
கனவுக்குள் வாழ்கின்ற
கற்பனையில் சுகம் உண்டு .
-------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கவிதை அருமை கவிஞரே
பதிலளிநீக்கு