வேலையில்லாப் பட்டதாரி - - கவிதை
—————
வேலையில்லா வாலிபன் நான்
வேதனையின் காதலன் நான்
முகவரி இல்லாத கடிதம் நான்
போகும் இடம் தெரியாத புலம்பல் நான்
என் மேல் முகவரி
எழுதப் படாததால்
எடுத்தவர்கள் ஏதேதோ எழுதினார்கள்
என்மேல் வன்முறை முகவரி
எழுதப் பட்டு
ரத்த முத்திரை
குத்தப்படும்போது மட்டும்
ஏ சமுதாயமே
ஏன் கொதிக்கிறாய்
என் மேல்
முகவ்ரி எழுதாமல் விட்டது
உன் குற்றம்
——நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சரிதான்...
பதிலளிநீக்குசிறப்பான வரிகள்...
பதிலளிநீக்கு