வியாழன், 16 நவம்பர், 2023

பரீட்'சை' - கவிதை

 பரீட்'சை' - கவிதை 

------------------------------

படிப்பதற்குக்  கிடைத்திருந்த 

நாளெல்லாம் பறந்து விடும் 

முடித்து விட்ட பாடங்கள் 

முடியாதது போல் தோன்றும் 


தேர்வுக்கு முதல் நாளில் 

லேசாகக் காய்ச்சல் வரும் 

தெரிந்த பாடம் எல்லாம் 

கனவுக்குள் காட்சி தரும் 


ஹாலுக்குள் நுழைந்ததுமே 

கண்ணுக்குள் மயக்கம் வரும் 

கேள்வித்தாள் கிடைத்தவுடன் 

லேசாக வேர்த்து வைக்கும் 


எல்லாமே எளிதான 

கேள்வியென்று தெரிய வரும் 

இரண்டு மணி நேரத்தில் 

'இங்க்' கெல்லாம் தீர்ந்து விடும் 


அடுத்த நாள் பரீட்சைக்குப் 

படிப்பதற்குப் போரடிக்கும் 

எப்போது முடியுமென்று

ஏக்கத்தில் மனம் துடிக்கும் 


---------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...