வியாழன், 2 நவம்பர், 2023

டூரிங் டாக்கீஸ் - கவிதை

 டூரிங் டாக்கீஸ் - கவிதை 

———————-----------------------

குவித்து வைத்த கொத்துப் புரோட்டாவை

அதக்கி விட்டுக் கிளம்பும் அவசரம்


கீத்துக் கொட்டகைச் சினிமாவுக்கு

கடைசி ரெகார்ட் போட்டாச்சு


அழுத்தும் சைக்கிளின் பின்புறம்

அமுக்கும் நண்பனின் எடை


பெஞ்சு டிக்கெட்டு புல் ஆகி

மண்ணு டிக்கெட் வாங்கியாச்சு


குவித்து வைத்த மண்ணுக்குள்

சுடும் சுருட்டுத் துண்டுகள்


பழுப்புத் திரையில் பல்லி

வெளிச்சம் பட்டதும் ஓடும்


பீஹார் வெள்ளம் முடிந்து

பெரிய படம் 22 ரீல்


எத்தனை சினிமாக்கள் அந்தத் திரையில்

சிரிக்கவும் அழவும் வைத்தன


மூன்று இன்டெர்வல் விடுகையில் 

முறுக்கும் கடலை மிட்டாயும்


திரும்பும்போது நண்பன் முறை

குத்தும் கேரியர் கம்பிகள்  நமக்கு


———-நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


3 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...