ஞாயிறு, 19 நவம்பர், 2023

உயிர் ஓட்டம் - கவிதை

 உயிர் ஓட்டம் - கவிதை 

-------------------------

உயிரென்ற நூல் சுற்றப்  

பம்பரமாய் ஆடியது 

ஆட்டத்தை முடித்து விட்டு 

ஆகாயம் போகிறது 


சங்கூதும் ஒலியோடு 

பச்சையோலைப் படுக்கையிலே 

கட்டையொன்று படுத்தபடி 

கடைசியிடம் போகிறது 


ஆசைகளின் வழி ஓடி 

ஆர்ப்பாட்டம் செய்து விட்டு 

அமைதியாக அடங்கியது 

ஆமையாக ஒடுங்கியது 


கூடவரும் உயிர்களுக்கும் 

குடமுடைக்கும் சந்ததிக்கும் 

கொஞ்சநாள் அழுகைக்குக் 

காரணமாய் ஆகிறது 


------------------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...