வெள்ளி, 17 நவம்பர், 2023

ஒத்தையடிப் பாதை - கவிதை

 ஒத்தையடிப் பாதை - கவிதை 

-------------------------------------

இது 

ஓராயிரம் கால்களின் 

ஒற்றுமை அடையாளம் 


அந்தக் 

கால்கள் பின்னிய 

காட்டுக் கயிறு 


இது 

நெளிந்து கிடக்கும் 

நீளப் பாம்பு 


அதில் 

வளைந்து போகும் 

குறுக்குப் பாதை 


இது 

தார் ரோட்டுக்குத் 

தகப்பன் சாமி 


இதில் 

நடந்து சென்றுதான் 

நாகரிகம் வளர்ந்தது 


அங்கே 

கான்க்ரீட் ரோட்டில் 

வழுக்கிச் செல்லும் 


அந்தக் 

காரில் விரையும் 

கால்களுக்குத் தெரியுமா 


இந்த 

ஒத்தையடிப் பாதையின் 

உரசல் சுகம் 


இங்கே 

வயலிலும் காட்டிலும் 

வளரும் பாதையே 


நீ 

வந்த வழிதான் எங்கள் 

வாழ்க்கை வலி 


--------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...