மகுடம் சூட்டலாம் - கவிதை
————————--------------------—-
உள்ளத்தில் தூய்மையும்
உதட்டிலே வாய்மையும்
செயலிலே நேர்மையும்
சித்தத்தில் கூர்மையும்
எல்லோரும் ஒன்றென்ற
எண்ணத்தில் தாய்மையும்
நல்லோரைச் சேர்க்கின்ற
நயத்திலே மென்மையும்
பொல்லோரைச் சாய்க்கின்ற
புயலிலே வன்மையும்
எல்லாமும் இருக்கின்ற
எவரேனும் இருந்திட்டால்
மகுடம் சூட்டுவோம்
மன்னர் ஆக்குவோம்
———-நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்கு