புதன், 15 நவம்பர், 2023

தீபா'வலி' - கவிதை

தீபா'வலி' - கவிதை 

--------------------------------

அதிகாலை உசுப்பி விட்ட

தாத்தாவைக் காணோம்


உச்சந்தலை எண்ணெய் வைத்த

அப்பத்தா காணோம்


பலகாரம் சுட்டுப் போட்ட

அம்மாச்சி காணோம்


கறிக்குழம்பு சமைச்சு வச்ச

அத்தையைக் காணோம்


இட்லியை அவிச்சு வச்ச

அம்மாவைக் காணோம்


பட்டாசு வாங்கி வந்த

மாமாவைக் காணோம்


ஓலை வெடி கொளுத்திப் போட்ட

அப்பாவைக் காணோம்


ஒவ்வொரு உயிராய்

ஊர் விட்டுப் போனதால்


திரியின் வலியாக

எரிகிறது இப்போது


தீபத்தின் ஒளியாகத்

தெரிந்த தீபாவளி


-------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...