திங்கள், 9 அக்டோபர், 2023

சுற்றிய சூழல்கள் - கவிதை

 சுற்றிய சூழல்கள் - கவிதை

------------------------------------------------

பிறப்பில் ஒரு சூழல்

வளர்ப்பில் ஒரு சூழல்


பள்ளியில் ஒரு சூழல்

கல்லூரியில் ஒரு சூழல்


வேலையில் ஒரு சூழல்

குடும்பத்தில் ஒரு சூழல்


இளமையில் ஒரு சூழல்

முதுமையில் ஒரு சூழல்


சூழலின் கைதியாய்

வாழ்வினைக் கழித்தவனை


நல்லவன் கெட்டவன் என்று

பிரிப்பதில் பயன் என்ன


சுற்றும் சூழலின்

சுவையைச் சரியாக்க


சகலரும் நல்லவரே

சமுதாயம் நல்லதே


-----------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...