ஞாயிறு, 8 அக்டோபர், 2023

தேவைக்கு மேல் தேடுவது - கவிதை

தேவைக்கு மேல் தேடுவது - கவிதை

--------------------------------------------------

பசித்த வயிறு கூட

போதும் என்று சொல்லி விடும்


தவித்த வாயும் கூட

போதும் என்று சொல்லி விடும்


பேராசை மனம் ஒன்றே

இன்னும் என்று கேட்டு வைக்கும்


மேலும் மேலும் என்று

சேர்த்த பணம் பொருள் எல்லாம்


அனுபவிக்க முடியாமல்

அம்போ என்று போயே விடும்


தேவைக்குச் சேர்த்து வைத்து

தேவைக்குச் செல வழித்து


சேவைக்கே வாழ்வு என்று

சிந்தித்து வாழ்ந்திருந்தால்


இன்பத்தில் வாழ்வு உண்டு

என்றுமே புகழும் உண்டு


------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...