திங்கள், 23 அக்டோபர், 2023

ரெயில் பயணம் - கவிதை

 ரெயில் பயணம் - கவிதை 

------------------------------------------------------

ஒம்பதரை வண்டியில் 

ஒன்றரைச் சீட்டுக்குப் 

போட்டி வரும் 


ஒன்றரை சீட்டில் 

ஓர   சீட்டுக்கு 

ஆசை வரும் 


கண்களை மூடிக் கொண்டு 

காதுகளைத் தீட்டிக் கொண்டு 

பேச்சு வரும் 


கண்களைத் திறந்து கொண்டு 

கற்பனையில் மிதந்து கொண்டு 

யோசனை வரும் 


தாம்பரத்தில் துண்டு போட்டுத் 

தானாகப் பாடுவோர்க்குத் 

திட்டு வரும் 


மாம்பலத்தில் ஏறும் 

மணிக்குரல் பிச்சைக்குத் 

துட்டு வரும் 


கால் ரூபாய் அரை ரூபாய் 

முழு ரூபாய் ஆகிப் போன 

கடலை வரும் 


சூடான மண்ணோடு 

'சுருக் ' கான கல்லோடு 

சேர்ந்து வரும் 


நின்னு போன சின்ன ரெயில் 

நெரிசலுக்கு 

நெஞ்சுக்குள் ஏக்கம் வரும் 


பெரிய ரயில் அகலத்தில் 

நிற்கின்ற நேரத்தில் 

நினைப்பு வரும் 


-----------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...