வியாழன், 5 அக்டோபர், 2023

முடிவு - கவிதை

 முடிவு - கவிதை 

----------------------------------

எந்த மனைவியின் பெயரை

விண்ணப்பத்தில் எழுதுவது

முடிவு செய்தாகி விட்டது


எந்த பினாமியிடம்

சூட்கேஸ்களைத் தள்ளி விடுவது

முடிவு செய்தாகி விட்டது


எவ்வளவு சொத்து மதிப்பை

வெளியே தெரியப்படுத்துவது

முடிவு செய்தாகி விட்டது


எந்தப் பட ஷூட்டிங்கைத்

தள்ளி வைப்பது

முடிவு செய்தாகி விட்டது


எந்த ஊரில் தலைவரோடு சேர்ந்து

தரிசனம் கொடுப்பது

முடிவு செய்தாகி விட்டது


எந்தத் தொகுதியில்

தேர்தலில் போட்டியிடுவது

முடிவு செய்தாகி விட்டது

--------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...