செல்லத் தொல்லை - கவிதை
-------------------------------------
நட்ட நடு ரோட்டிலே
நடந்து பேசிப் போறது
நட்டு கழண்ட தில்லைங்க
பட்டப் பகல் பாதையில்
பஸ்ஸு மோதி விழுந்தது
போதைக் கேசு இல்லைங்க
அங்கு மிங்கும் ஓடியே
ஆபீஸ் வேலைப் பேச்சுங்க
அலட்டல் கேசு இல்லைங்க
தொங்கு நூலு காதிலே
தூது போகும் சட்டைக்கு
காது மெஷின் இல்லைங்க
துப்பட்டாவின் கலருக்கு
துருவித் துருவித் தேடுறது
துணிக்கு மேட்சிங் இல்லைங்க
'அண்ணாத்தே ' மெட்டெல்லாம்
அழுத்திப் போட்டுக் கேக்கிறது
சிடி பிளேயர் இல்லேங்க
டப்பு டப்புன்னு ஈமெயில்
டைப்பு அடிச்சுப் போறது
கம்பியூட்டரும் இல்லைங்க
சப்பு சப்புன்னு முகத்தையே
புடிச்சுப் போட்டுக் காட்டுறது
கேமெராவும் இல்லைங்க
டிரிங்குச் சத்தம் கேட்டுத்
திடுக்கித் திரும்பிப் பார்த்தா
சைக்கிள் காரன் இல்லைங்க
சுருங்கிப் போன பேண்டிலே
சுத்திக் கட்டி மாட்டினா
பெல்ட்டு மட்டும் இல்லைங்க
நேரமெல்லாம் தேச்சுங்க
நித்திரையைச் சாய்ச்சுங்க
நேத்து வந்த பூச்சிங்க
தூர மெல்லாம் போச்சுங்க
துட்டும் ரெம்ப ஆச்சுங்க
தொல்லைச் 'செல்'லுப் பேச்சுங்க
------------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக