சாமி யார் - கவிதை
-------------------------------------
பால் குடியை மறக்கடிக்க ,
பசியெடுத்த காரணத்தால்
பழனி மலை அடிவாரம்
பால் சாமி ஆகிப் போனான்
ஒண்ணாங்கிளாஸ் பெயிலாகி
உதறலெடுத்த காரணத்தால்
உச்சிப்பிள்ளை மலையோரம்
ஓடிப் போய்ச் சாமியானான்
காதலிக்குக் கல்யாணம்
தோல்வியிலே துவண்டுபோய்
கண்டபடி முடிவளர்த்து
தாடிசாமி ஆகிப் போனான்
கடன்தொல்லை தாங்காமல்
காணாமல் ஓடியவன்
கல்கத்தாக் காளியிடம்
சாமியாகச் சரணடைந்தான்
பொண்டுபிள்ளை விரட்டியதால்
வீட்டை விட்டு வெளியேறி
காசிப்பக்கம் சாமியாகக்
கலந்துபோனான் கூட்டத்தோடு
எத்தனையோ இக்கட்டுகள்
சாமியாகச் சொன்னாலும்
அத்தனையும் சமாளிக்கும்
குடும்பத்தான் தான் சாமி
--------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக