திங்கள், 23 அக்டோபர், 2023

ஆமாம் - கவிதை

 ஆமாம் - கவிதை 

------------------------------------

ஆமாம் 

ஒவ்வொரு கவிதைக்குள்ளும் 

ஒரு சத்தியம் ஒளிந்து கொண்டு தான் இருக்கிறது 


எழுதும் போது  ஏனோ  அது 

எழுந்திருப்பதில்லை 

சொல்லும்போது மட்டும் 

சுருட்டென்று 

எழுந்து விடுகிறது 


ஏதோ ஒரு வரியில் வந்து 

விழுந்து விடுகிறது 

அதை நாம் திரும்பக் கேட்கும்போதும் 

தெரிவதில்லை 

அது எங்கே இருக்கிறது 

அதைக் கண்டுபிடிப்பதில்தான் 

அந்தக் கவிதையின் சூட்சுமம் இருக்கிறது 


நானும் முயற்சி செய்வதில்லை 

நீங்களும் முயற்சி செய்வதில்லை 

எழுதுவதை விட 

பேசிக்கொண்டும்தான் இருக்கிறோம் 

பேசுவோம் 

எப்போதாவது அதற்குள் 

கவிதை வரலாம் 


வரும் கவிதையும் 

எப்போதாவது நமக்குத் தெரியலாம் 

அதுவரை சொல்லிக் கொண்டு இருப்போம் 

ஏதாவது வார்த்தைகளை 

------------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...