வியாழன், 5 அக்டோபர், 2023

வேண்டுதல் - கவிதை

 வேண்டுதல் - கவிதை 

-------------------------------------

வனகாளி அம்மன்

திருவிழா


கோயிலில்

ஆடு வெட்டிப் பலி


வீட்டில்

கோழிக் குழம்பு

மீன் வறுவல்


மாட்டுத்தோல் செருப்போடும்

பட்டுத் துணியோடும்

தெரு முழுக்கக் கூட்டம்


ஊர் கூடிப்

படையல் வைத்துக்

கும்பிட்டுக் கேட்கும்


எங்கள்

எல்லா உயிர்களையும்

காப்பாத்து ஆத்தா


---------------------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...