பழைய கோயில் - கவிதை
---------------------------------------------------
ஆராதனை தீபத்தில்
அம்மன் கண்ணொளி
எண்ணைப் புகையோடு
குங்கும வாசம்
சுற்றுப் பிரகார
வவ்வால் படபட
வெளிப் பிரகார
இடிந்த சுவர்கள்
அங்கும் இங்குமாய்ப்
படர்ந்த செடிகள்
பாதியில் நிற்கும்
மொட்டைக் கோபுரம்
ஓரத்தில் வளர்ந்த
நாகப் புத்துகள்
அரச மரத்தில்
மஞ்சள் கயிறுகள்
வாசற் கோபுர
வீச்சுக் காத்து
பழைய கோயிலாய்ப்
பாவமாய் நின்றாலும்
பாசம் காட்டிக்
கூப்பிடும் மறுபடி
கர்ப்பக் கிரகத்தின்
கர்ப்பப்பை கதகதப்பு
-----------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்குஅருமை நண்பரே
பதிலளிநீக்குகவிதை அருமை கவிஞரே
பதிலளிநீக்கு