பூலோக சொர்க்கம் -கவிதை
---------------------------------------------------
பிறப்பு முதல் இறப்பு வரை
எல்லாம் சொர்க்கம் இங்கே
மழலைப் பருவக்
குறும்பு சொர்க்கம்
பள்ளிப் பருவ
ஆட்டம் சொர்க்கம்
படித்த பாடம்
எல்லாம் சொர்க்கம்
இளமைப் பருவக்
கிளர்ச்சி சொர்க்கம்
இரண்டு மனங்களின்
காதல் சொர்க்கம்
குடும்ப வாழ்க்கைக்
கூட்டம் சொர்க்கம்
ஊடல் கூடல்
எல்லாம் சொர்க்கம்
வேலை செய்யும்
உழைப்பு சொர்க்கம்
விடுமுறை நாளின்
பயணம் சொர்க்கம்
ஆடிக் களைத்த
அலுப்பும் சொர்க்கம்
பகலும் சொர்க்கம்
இரவும் சொர்க்கம்
எல்லாம் முடிந்த
இறப்பும் சொர்க்கம்
-------------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சரிதான்...
பதிலளிநீக்குஇரசித்தேன் கவிஞரே...
பதிலளிநீக்கு