திங்கள், 23 அக்டோபர், 2023

தேர்தல் சினிமா - கவிதை

 தேர்தல் சினிமா - கவிதை 

----------------------------------------------

கட்சியில் சேரச் சொல்லி 

அதட்டலாக அழைப்பு 

நீட்டப்பட்ட நோட்டுக் கட்டுகள் 

எம்பி சீட்டோடு 


போன வருடம் 

சிகரெட் புகையோடு 

திருவல்லிக்கேணி லாட்ஜில் 


இந்த வருடம் 

பைவ் ஸ்டார் ஹோட்டலில் 

ஏசி ரூமில் 


மூன்று படங்களின் 

நூறு நாள் ஓட்டம் 


மூன்று மனைவிகள் 

ஐந்து பினாமிகள் 


இப்போது 

எம்பி சீட்டுக்கு அழைப்பு 


நேற்றைய 

நூறாவது நாள் விழாவில் 

எழுந்த கைதட்டல்கள் 

விழுந்த மாலைகள் 


வாழ்த்திய தலைவரை 

ஓட்டுக் கணக்குப் 

பார்க்க வைத்தது 


பனகல் பார்க் கூட்டத்தில் 

தலைவரும் தம்பியும் 

தலைவரைப் புகழும் தம்பி 

தம்பியைப் புகழும் தலைவர் 


அடுத்த பார்லிமெண்ட் 

கனவில் தலைவர் 

அடுத்த பட வெற்றியில் 

தம்பி நடிகர் 


வீட்டுப் பிரச்னையும் 

நாட்டுப் பிரச்னையும் 

விட்டு விட்டுக் 

கை தட்டும் 

மக்கள் கூட்டம் 


தேர்தல் சினிமா 

நன்றாகவே ஓடுகிறது 


----------------------------நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...