தடம் மாறும் சந்ததிகள்- கவிதை
——————————-----------------------—-
இயற்கை அறிவை
இழுத்து மூடி விட்டு
செயற்கை அறிவைச்
செதுக்கி வைத்து விட்டு
இரக்கம் அன்பு எல்லாம்
ஏறக் கட்டி விட்டு
வன்முறை வழிகட்கு
வாழ்த்துச் சொல்லி விட்டு
படிப்பு முதல் வேலை வரை
பணம் என்று ஆக்கி விட்டு
பாதை மாறுகிறார் என்று
பதைபதைத்து என்ன பயன்
ஒழுக்கக் கல்வியினை
ஊட்டும் கல்வி முறை
உருவாக்கி வைத்தாலே
அது ஒன்றே போதுமன்றோ
தடத்தைப் போடுவதில்
தடுமாற்றம் இல்லையென்றால்
தடம் மாறும் சங்கதியே
சந்ததிக்குத் தெரியாது
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமையான வரிகள்...
பதிலளிநீக்கு