செவ்வாய், 3 அக்டோபர், 2023

பேறு கால விடுப்பு - கட்டுரை

 பேறு கால விடுப்பு - கட்டுரை 

-----------------------------------

மனைவியின் பேறு காலத்தின் போது கணவனுக்கு ஆறு மாத விடுமுறை, சம்பளத்தோடு ன்னு சட்டம் சில நாடுகளில் வந்திருக்காம். நம்மளும் கேட்கலாம் தான். அதுல சில விஷயங்களை மட்டும் நம்ம கரெக்டா புரிஞ்சுக்கணும் .


இப்ப பேறுகால விடுப்பு ங்கிறது மனைவிக்கு உதவியா இருக்குறதுக்குத் தானே தவிர உபத்திரவம் கொடுக்கிறதுக்கு இல்லே. உதாரணத்துக்கு லீவு கிடைத்தவுடன் வீட்டிலிருந்துக்கிட்டு வயித்துக்காரப் புள்ளைய ' எனக்கு அதைப் பண்ணி போடு, இதைச் செஞ்சு கொடு' ன்னு அடுப்படிக்கு துரத்தி விட்டுக்கிட்டு , தான் சொகுசா உட்கார்ந்து பேப்பர் படிச்சுக்கிட்டு டிவி பார்த்துக்கிட்டு மிரட்டிக் கிட்டல்லாம் இருக்கக் கூடாது .


சொல்லப்போனால் மனைவிகிட்ட மாசம் ஒரு தடவை இந்த விஷயத்துல சர்டிபிகேட் வாங்கி தவணை முறையில் தான் லீவு சாங்க்ஷன் பண்ணணும் . ஏதாவது பிரச்சனைன்னு தெரிஞ்சா லீவை கேன்சல் பண்ணிரலாம். சம்பளம் கட் பண்ணிரலாம். இந்த விடுமுறைக் காலங்களில் கணவன் பண்ண வேண்டிய விஷயங்கள் எல்லாம் முழுசா பட்டியல் போட்டு முதல்லேயே ஆபீஸ்ல குடுத்துறணும்.


உதாரணத்துக்கு ஒண்ணு ரெண்டு.


அடுப்படி வேலைகளை முழுவதும் கணவன் பொறுப்பு எடுத்துக்கணும்.

காய்கறி வாங்கிட்டு வர்றது, நறுக்குறது, கழுவுறது, சமைக்கிறது, பாத்திரங்கள் கழுவுறது எல்லாமே கணவனோட பொறுப்பு தான். ஊட்டி விடுறது வேணா , அவங்க அவங்க சவுரியத்துக்கு விடலாம்.


அப்புறம் பார்த்துக் கவனமா பாத்ரூம் கூட்டிட்டு போறது, புத்தகம் படித்துக் காண்பிக்கிறது, சேர்ந்து உட்கார்ந்து பல்லாங்குழியோ கேரம் விளையாடுறது , அப்பப்ப ஆஸ்பத்திரி கூட்டிட்டு போய் காமிக்கிறது இத்தியாதி.


பிரசவ வலி வர்ற மாதிரி தெரிஞ்ச உடனே ஹாஸ்பிடல்லே அட்மிட் பண்ணி சுகப்பிரசவம் ஆன உடனே குறிப்பிட்ட நாட்களில் திரும்ப வீட்டுக்குக் கூட்டிட்டு வர்றது. அதுவரை வீட்டுக்கும் ஹாஸ்பிடலுக்கும் ட்ரிப் அடிக்கிறது. வீட்டுக்கு வந்தப்புறம் புள்ளையோ பெண்ணோ அதுகளுக்கு குளிப்பாட்டி விடுறது, தாலாட்டு பாடுறது, தூங்க வைக்கிறது . இதுவும் பண்ணணும் .


முக்கியமான கண்டிஷன். இதுக்காக ஊரில் இருந்து வந்திருக்கிற மனைவியோட அம்மா வகையறாக்களை இந்த விஷயங்களுக்கெல்லாம் தொந்தரவு செய்யக்கூடாது .நாமளே தான் செய்யணும். கூடவே அவங்களையும் சேர்த்து கவனிச்சுக்கணும் . இவ்வளவு விஷயங்கள் கரெக்டா செஞ்சு மனைவி சர்டிபிகேட் கொடுத்து மாமியாரும் அப்ரூவல் பண்ணி இதையெல்லாம் கொடுத்த பிறகுதான் அந்த ஆறு மாதங்களுக்கு சம்பளம் கொடுக்கணும் . இதிலே விட்டுப் போன பாயிண்ட்டுகளுக்கெல்லாம் பிடித்தம் பண்ணிக்கலாம்.


என்ன சரிதானே . என்னது ஆபீசுக்கு நேரமாச்சா கிளம்பிட்டு இருக்கீங்களா, எப்பவும் ஒரு மணி நேரம் லேட்டாய்த் தானே போவீங்க. இப்ப என்ன அவசரம். உங்களுக்கு லீவு கிடைக்கிறதுக்கு தானே சார் இவ்வளவு ஏற்பாடும். இதைக் கூட முழுசா கேட்காம போறீங்களே சார் .


-------------------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...