வெள்ளி, 27 அக்டோபர், 2023

மறந்தே போகிறது - கவிதை

 மறந்தே போகிறது - கவிதை 

-----------------------------------

ஒவ்வொரு இரவும்

நினைக்கத்தான் செய்கிறேன்


சீக்கிரம் எழவேண்டும்

சிலவற்றைச் செய்ய வேண்டும்


உடல் நலத்திற்கு

உடற் பயிற்சி வேண்டும்


மன நலத்திற்கு

தியானப் பயிற்சி வேண்டும்


எழுந்தவுடன் பரபரப்பு

என்னென்னமோ வேலைகள்


வீட்டின் அவசியம்

அலுவலக அவசரம்


ஓட்டமும் நடையும்

வேலையும் களைப்புமாய்


முடிந்த நாளோடு

வீட்டுக்குத் திரும்பி


படுக்கும் போது தான்

மறுபடி ஞாபகம்


சீக்கிரம் எழவேண்டும்

சிந்தனை செயலாக்க


மறுபடி காலை

மறந்தே போகிறது


-----------------------நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...