ஆரம்பப் பாடம் - கவிதை
--------------------------------------------------
தினசரியில் இருந்து
திருப்பு முகத்தை
தேநீர்க் கோப்பைக்கு
நன்றி சொல் முகம் பார்த்து
சமையலறை குளியலறை
சதிர் ஆடும்போது
துணிகளைத் துவைத்து வை
தண்ணீரைப் பிடித்து வை
அலுவலகம் கிளம்பும்போது
அன்புப் பார்வை பார்த்துப் போ
இடை வேலை நேரத்தில்
ஏதாவது தொலை பேசு
திரும்பும் போது வாங்கி வா
அவள் ஆசைத் தின்பண்டம்
பகல் நேர வேலைகளைப்
பரிவோடு கேட்டுப் பார்
குறை சொல்லும் பேர்களைக்
கோபப்பார்வை பார்த்து விடு
குளிர் இரவு நேரத்திலே
கூந்தலிலே முத்தமிடு
இறுதிவரை வரப்போகும்
உறுதியான துணைக்கு நீ
செய்கின்ற சில சேவை
ஆரம்பப் பாடம்தான்
---------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக