வெள்ளி, 27 அக்டோபர், 2023

நதி நீர் நாகரிகம் - கவிதை

 நதி நீர் நாகரிகம் - கவிதை 

---------------------------------------

தெற்கே காய்கின்ற 

பள்ளமாய் ஒருபுறம் 

வடக்கே பாய்கின்ற 

வெள்ளமாய் மறுபுறம் 


வெயிலில் எரிகின்ற 

கூரைகள் ஒருபுறம் 

வெள்ளத்தில் மிதக்கின்ற 

வீடுகள் மறுபுறம் 


கட்டாந் தரைகளாய் 

கிராமங்கள் ஒருபுறம் 

தண்ணீர்க் குளங்களாய்த் 

தீவுகள் மறுபுறம் 


வயிறொட்டிக் காய்கின்ற 

காளைகள்  ஒருபுறம் 

வயிறுப்பி மாய்கின்ற 

மாடுகள் மறுபுறம் 


கண்ணுக்குள் பசியோடு 

வயிற்றுக்குள் கவலையோடு 

காத்திருக்கும் மக்கள் 

கண்ணீரோடு இருபுறம் 


-----------------------நாகேந்திர பாரதி 


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...