அத்தனையும் அருகிலே - கவிதை
—————————----------------------------—
உன் வீடு உன் குடும்பம்
உன் சுற்றம் உன் நட்பு
அத்தனையும் அருகிலே
அது போதும் உனக்கு
தூரத்துப் பச்சையெல்லாம்
பக்கம் போ , பழுப்பு
கனவுலகக் களிப்பெல்லாம்
விழித்துப் பார் , கசப்பு
இருக்கின்ற இடத்தினிலே
இருக்கிறது சொர்க்கம்
இந்த நொடியினில் தான்
இருக்கிறது இன்பம்
அத்தனையும் அருகே தான்
அடைந்திடுக அமைதி
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
சிறப்பு...
பதிலளிநீக்கு