சனி, 14 அக்டோபர், 2023

உயிர் காக்கும் வீரர்கள்- கவிதை

 உயிர் காக்கும் வீரர்கள்- கவிதை 

-----------------------------------------

கொரோனா நோயில்

மீண்டவர் சொல்வர்


மருத்துவ வீரரின்

மாபெரும் சேவை


வன்முறைக் களத்தில்

பிழைத்தவர் சொல்வர்


காவலர் வீரரின்

காருண்ய சேவை


பஞ்சமும் வெள்ளமும்

பார்த்தவர் சொல்வர்


சமூக சேவகர்

சரித்திர சேவை


துன்பத்தைத் துடைக்கும்

தூய்மை மனிதர்கள்


ஒவ்வொரு பேரும்

உயிர் காப்போரே

----------------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


1 கருத்து:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...