அடை காக்கும் ஆசைகள் - கவிதை
------------------------------------------------
அளவான சூட்டில்
அடை காத்து வந்தால்
அழகான குஞ்சுகள்
அமைவது உறுதி
தன்மனம் தெரிந்து
தன்செயல் புரிந்து
முயன்றிடும் ஆசை
திருவினை ஆக்கும்
அகலமாய்க் கால் வைத்து
ஆசையில் மூழ்கினால்
இருப்பதும் போக்கித்
தெருவினில் சேர்க்கும்
--------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை....
பதிலளிநீக்குகவிதை வரிகள் அருமை கவிஞரே
பதிலளிநீக்கு