ஆடவரும் பெண்டிரும் - கவிதை
—————————---------------------—-
ஆதாமும் ஏவாளுமாய்
ஆதியிலே வந்ததெல்லாம்
ஆடவரும் பெண்டிருமாய்
ஆடிப்பாடி வாழ்வதற்கே
வாரிசுகள் உருவாக
வாய்த்துவிட்ட பாலினங்கள்
வம்புகளில் மாட்டாமல்
வாழ்க்கையினை நடத்துதற்கே
மேலென்றும் கீழென்றும்
மேட்டிமைகள் செய்யாமல்
ஒன்றென்று உணர்ந்திட்டு
உரிமைகளைப் பங்கிட்டு
நன்றென்று வாழ்ந்திட்டால்
நானிலமே நலமாகும்
———நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமையான கவிதை வரிகள்
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஎப்படிநலமா? தாங்கள் மீண்டும் வந்திட்டேன் ஐயா.. தொடருகின்நேன்.
அன்புடன்
த.ரூபன்
அருமை...
பதிலளிநீக்கு