புதன், 11 அக்டோபர், 2023

ஏனிந்த மாற்றங்கள் - கவிதை

 ஏனிந்த மாற்றங்கள் - கவிதை 

----------------------------------------

என்றும் நிரந்தரம்

மாற்றம் ஒன்றே


என்ற மந்திரம்

மறந்திடல் வேண்டாம்.


காலத்தின் மாற்றம்

கட்டாய மாற்றம்


மாற்றத்தின் பயனே

வாழ்க்கையின் வசதிகள்


மாற்றத்தின் விளைவே

சமுதாய முன்னேற்றம்


பயிரின் நடுவே

களைகளும் உண்டு


களைகளைக் களையும்

கலையினைப் பயில்வோம்


ஏமாற்றும் மாற்றத்தை

எடுத்து எறிவோம்


எண்ணத்தில் மாற்றத்தை

ஏற்றுக் கொள்வோம்


நல்ல மாற்றத்தை

நட்டு வளர்ப்போம்


நாடும் வீடும்

தழைக்கும் செழிக்கும்



-----------------------நாகேந்திர பாரதி


My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு

 சிறுகதை மதிப்புரை - கதை புதிது நிகழ்வு  ---------------------------------------------------------------------------- நன்றி அழகியசிங்கர் . வ...