காலம் கடந்தாலும் - கவிதை
--------------------------------------
இறந்த காலம் , என்றோ
இறந்த காலம்
எதிர் காலம், கையில்
இறங்காக் காலம்
காலம் கடந்ததென்று
கவலையும் வேண்டாம்
எதிர்காலம் எப்படியென்ற
ஏக்கமும் வேண்டாம்
நிகழ் காலமே
நிதர்சனக் காலம்
இன்று நன்று என்று
எப்போதும் இருந்தாலே
எல்லாக் காலமுமே
இன்பக் கோலம்தான்
-------------------------நாகேந்திர பாரதி
My Poems/Stories in Tamil and English
அருமை...
பதிலளிநீக்கு