வெள்ளி, 5 மே, 2023

மறைந்து வரும் பறவையினங்கள் - கவிதை

 மறைந்து வரும் பறவையினங்கள் - கவிதை 

————————————----------------------------------———-

அதோ அந்தப் பறவைக் கூடு

அதைப் பார்க்கும்போது ஏன் இந்த ஏக்கம்

குஞ்சுகளைக் கூட்டில் விட்டு விட்டு

வெளிக் கிளம்பும்  அந்தத் தாய்க் குருவி


கழுத்தை வளைத்துப் பார்க்கும் பார்வை

மரத்துக்கு மரம் பறக்கும்  துடிப்பு

விருட்டென்று விண்ணில்  அதன் வேகம்

விரியும் சிறகுக்குள் சிறு உடல்


திடீரென்று புள்ளியாய் வானில் கரையும் 

மறுபடி பறவையாய் மாறி திரும்ப  வரும்

குஞ்சுகளின் விரிந்த வாய்க்குள் திணிக்கும்

சிவந்த மூன்று சிமிழ்கள் தெரியும்


அந்தக் குருவி அன்று  வீட்டுக்குள் வந்தது

ஒரு வாய் அரிசியைக் கொத்திப் போனது

அடுத்த நாள் காணோம்,  வேடனா  , வெப்பமா 

வேறுபட்ட  சூழலா  , விளங்காத  வேதனை 

———————நாகேந்திர பாரதி 

My Poems/Stories in Tamil and English 


2 கருத்துகள்:

ஒரு ஓடை நதியாகிறது - கவிதை

 ஒரு ஓடை நதியாகிறது - கவிதை  ———————-------------------------———— விழுந்த இடத்தில் வெறும்  ஓடை தான் நடந்து போனால் தான் நதியென்ற பேர் கிட்டும...