வியாழன், 25 மே, 2023

தாயின் சிரிப்பு - குறுங்கதை

 தாயின் சிரிப்பு - குறுங்கதை 

——————---------------------------———

‘அது எப்படிக்கா உன்கிட்டே மட்டும் உடனே ஒட்டிக்கிட்டு சிரிக்குது . ‘

‘என்கிட்டே இருக்கிறப்போ எப்போவுமே நை நை ன்னு ஒரே அழுகை ‘

அலுத்துக்கொண்டாள் நளினி , தன் அக்கா சுந்தரியிடம் .

‘அதுக்குத்தாண்டி நானும் அடுத்த தெருவிலே இருந்து தினசரி ஓடியேந்துடறேனே , என் செல்லக் குட்டியைத் தூக்க ‘

‘ எனக்கென்ன , புள்ளையா குட்டியா , அஞ்சு வருஷமாச்சு ‘ என்று அலுத்துக்கொண்டாள் சுந்தரி .

‘சே சே , நான் அப்படி நினைச்சுச் சொல்லலேக்கா ’ என்று சமாதானப்  படுத்தினாள் நளினி .

‘அவளுக்குக் குழந்தை பிறக்க வழி இல்லேன்னு தெரிஞ்சு மனம் ஒடிஞ்சு செத்துப் போய்த்தானே இளையவ வயித்தில பிறந்து வந்து மூத்தவளோட குழந்தையா ஒட்டிக்கிட்டு அவளைச் சிரிக்க வைக்கிறேன் ’ என்று நினைத்துக்கொண்டாள் குழந்தையின் ஆத்மாவில் நிறைந்திருக்கும் சொர்ணத்தம்மாள் , நளினி சுந்தரியின் தாய் .


——————-நாகேந்திர பாரதி

My Poems/Stories in Tamil and English  


1 கருத்து:

முடிவிலும் தொடரலாம் - கவிதை

 முடிவிலும் தொடரலாம் - கவிதை  ——————————---------------------------- மேம்போக்காக மேம்பாலத்தில் நடக்கும் இனிமை  மேலே வந்து மோதும் காற்றின் கு...